கருப்பின சிறுமி மீது ஸ்பிரே அடித்து துன்புறுத்திய போலீசார்!

police attack

அமெரிக்காவில் 9 வயது கருப்பின சிறுமியின் முகத்தின் காவல்துறையினர் ஸ்பிரே அடித்ததுடன் கைவிலங்கு மாட்டி துன்புறுத்திய சம்பவத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் தேதி கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. ஜார்ஜ் பிளாயிட்  காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கறுப்பினத்தவரின் வாழ்க்கை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் (BLACK LIVES MATTERS) வாசகம் வலுப்பெற்றுவருகிறது.

இதனை தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் போராட்டத்தில் 27 வயதான வால்டர் வாலஸ் என்ற கறுப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார்.

Rochester NY reacts to 9-year-old pepper sprayed, handcuffed by police

இந்நிலையில் நியூயார்க் மாகாணத்திலுள்ள ரோச்சஸ்டர் நகரில் நடந்துள்ளது இந்த கொடூரம். மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் வாகனத்துக்குள் ஏற்ற முயன்றனர்.

அப்போது அந்த சிறுமி அடம் பிடித்ததால் முகத்தில் ஸ்பிரே அடித்த காவல்துறையினர் சிறுமியை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறையினர், “மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி தங்களை தாக்கினார். அவரை பத்திரமாக அழைத்து செல்லவே பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தினார். கறுப்பின சிறுமி என்பதால் பாகுப்பாட்டை பார்க்கவில்லை.

அவரை வலுக்கட்டாயமாக அழைத்து செல்லவில்லை” என தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிக்கலாமே: அதிபர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? தெரியுமா?