தேர்தலில் தோல்வியடைந்தாலும் பதவி விலக மாட்டேன் – ட்ரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்றாலும் அமைதியாக பதவி விலகப் போவதில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இருப்பினும் இரு தலைவர்களும் பரஸ்பரம் விமர்சிப்பதும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதுமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

trump

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தபால் வாக்குகளில் மோசடிகள் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனிடம் அதிபருக்கான அதிகாரங்களை அமைதியான முறையில் வழங்க தயாரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அப்படி ஒன்று நடந்தால் அது மோசமானது எனவும், தோல்வியை சந்தித்தால் அமைதியான முறையில் பதவி விலக மாட்டேன் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் ஒருவேளை தோல்வியை சந்திக்க நேர்ந்தால் உச்சநீதிமன்றம் சென்று வாதிடுவோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, போட்டி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் வெற்றிப்பெற்றால், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

FB Page

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa