சம்மந்தியை காப்பாற்றிய ட்ரம்ப்!

Trump

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய வழக்குகளில் தொடர்புடைய 26 பேருக்கு முழு மன்னிப்பு வழங்கியுள்ளார். மேலும் மூன்று பேரின் தண்டனையை குறைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் தண்டனை வழங்கினாலும் மன்னிப்பு வழங்க அதிபருக்கு அதிகாரம் உண்டு. இதனால் குற்றவாளிகளின் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பால் மானஃபோர்ட், ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் மற்றும் அவரது மருமகனின் தந்தை சார்லஸ் குஷ்னர் உள்ளிட்டோருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

US President Donald Trump and First Lady Melania Trump (AFP)

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், பால் மனாஃபோர்ட் 2018ஆம் ஆண்டு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார்.

நிதி முறைகேடு, தன் மீதான விசாரணையை தடுக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.

அவருக்கு ஏழரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவருக்கு ட்ரம்ப் மன்னிப்பு வழங்கி தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளார்.

இதேபோல் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதற்காக தண்டிக்கப்பட்டவர் ரோஜர் ஸ்டோன். இவரின் தண்டனையையும் ட்ரம்ப் குறைத்துள்ளார்.

வரி ஏய்ப்பு, பிராசர நிதி சார்ந்த குற்றங்கள், சாட்சிகளைக் கலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர் டிரம்பின் சம்பந்தி சார்லஸ் குஷ்னர்.

இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் குறைக்கப்பட்டுள்ளது. பதவியிலிருந்து விலகுவதற்குள் மேலும் சிலருக்கு ட்ரம்ப் மன்னிப்பு வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்கலாமே: ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter