ரகசியமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ட்ரம்ப்

Trump

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே, கொரோனா தடுப்பூசியை ரகசியமாக செலுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வலியுறுத்திய நிலையிலும் மாஸ்க் போடாமல் மாஸ் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அறைக்குள் முடங்கினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவின் சட்டவிதிகளின்படி அதிபர் இல்லாமல் ஒரு நொடி கூட அரசு இயங்க முடியாது.

74 வயதுடைய ட்ரம்ப் மிகவும் வயதானவர் என்பதால் ஹை ரிஸ்க் பட்டியலில் ட்ரம்ப் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒருநாள் மட்டுமே வீட்டில் தனிமையில் இருந்த ட்ரம்ப், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பின் 3 நாட்களுக்கு பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் கடந்த ஜனவரி மாதமே கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், “ஜனவரி மாதத்திலேயே டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஆனால் எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் எத்தனை டோஸ் எடுத்துக் கொண்டார் என்பது போன்ற தகவல்களை வெளியிடமுடியாது” என தெரிவித்தார்

இதனிடையே கடந்த வாரம் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ட்ரம்ப், “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் வலி ஏதும் இல்லை, அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார்.