பைடனிடம் அதிகார பொறுப்பை வழங்க ட்ரம்ப் சம்மதம்!

Joe biden-Trump

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுப்படி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருந்ததை நாம் பார்த்தோம்.

ட்ரம்ப் முக்கியமாக நம்பியது ஜியார்ஜியா மற்று, பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிகள் குறித்துதான். அவை குறித்து நீதிமன்றமே ட்ரம்ப்க்கு குட்டி வைத்துவிட்டது. ’தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கள்’ என்று ட்ரம்பின் மனைவில் மெலனியா ட்ரம்பும் அறிவுரை கூறியிருந்தார்.

trump- biden

ட்ரம்பிடம் இருக்கும் அதிகாரங்களை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், ட்ரம்ப் ஒப்புதல் அளிக்காததால் அவை மேற்கொண்டு நகரவில்லை. தற்போது ட்ரம்ப் அந்தப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம். அந்தப் பணிகள் தீவிரமாக நடைபெறும். ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் ஒப்படைக்கவும் ட்ரம்ப் ஒத்துக்கொண்டார். மேலும் பதவியேற்பு விழா ஏற்பாட்டினை செய்யுமாறு உத்தரவிட்டார். ஜோ பைடன் தனது அமைச்சரவைக்கான முதற்கட்டப் பட்டியலை அறிவித்திருக்கிறார். அதில் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு ஆலோசகராக ஜாக் சல்லிஅன், உள்நாட்டுப்பாதுகாப்பு துறை மந்திரியாக அலெக்ஜாண்ட்ரா மயோர்காஸூம் உள்ளிட்டோர் பெயர்கள் இருக்கின்றன.இந்தியாவிலிருந்து விவேக் மூர்த்தி, இந்திரா நூயி ஆகியோரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் ஜோ பைடனிடம் ஒப்படைக்க ஏற்பாடு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter