விர்ஜீனியா கடற்கரையில் திடீர் துப்பாக்கிச்சுடு!

Beach

அமெரிக்காவின் வர்ஜீனியா கடற்கரையில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்ஜீனியா கடற்கரைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி சுட ஆரம்பித்தார்.

Virginia Beach: Two people were killed and at least eight injured in shooting  incidents, police chief says - CNN

இதனால் அங்கு வந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், அதி விரைவு அதிரடிப்படையினர் மற்றும் எப்பிஐ அதிகாரிகள் மக்களை காப்பாற்ற முயற்சித்தனர்.

இந்த தாக்குதலையடுத்து பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் கடற்கரையில் திரளான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் நுழைந்த மர்மநபர்கள், பொதுமக்கள் 9 பேரை துப்பாக்கி குண்டுகள் துளைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ளவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் பலரும் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.