அமெரிக்க செயற்கைக்கோள்களை விண்வெளியில் தாக்கும் ரஷ்ய ஆயுதங்கள்!

பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்களை தாக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணையை ரஷ்யா விண்வெளியில் சோதித்து பார்த்திருப்பதாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் குற்றம்சாட்டியுள்ளன.

செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. ரஷ்யா கபட நாடகமாடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் போர்ட் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் ஆற்றலை தடுக்க நினைக்கும் ரஷ்யா தனது சொந்த விண்வெளி ஆயுத திட்டத்தை நிறுத்தவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

satellite weapon

ரஷ்யா விண்வெளியில் ஏவுகணையை சோதனை செய்ததற்கு இங்கிலாந்து முதல்முறையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் விண்வெளி இயக்ககத்தின் தலைவர் ஹார்வி ஸ்மித் ரஷ்யாவின் ஆயுதம் போன்றதொரு செயற்கைக்கோள் சோதனை தமக்கும் கவலையளிப்பதாக கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சோதனைகளை ரஷ்யா தவிர்க்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa