அமெரிக்காவில் படித்து கொடிய கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த தமிழர்!

இந்தியாவில் மட்டுமில்லாது உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் கொரோனா மருந்துக்கான தடுப்பூ மருந்தை கண்டித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா. விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இவர் படித்தது அமெரிக்காவில்…

ஆந்திராவின் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் உள்ளவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா. இவர் திருத்தணி அருகே உள்ள நெமிலி கிராமத்தில் பிறந்தவர். ஆனால் அமெரிக்காவுக்கு படிக்க சென்ற கிருஷ்ணா, விஸ்கான்சினில் உள்ள மாடிசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதன்பின் தெற்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். என்னதான் அமெரிக்காவில் படித்திருந்தாலும் தாய் மண்ணின் மீதான பாசத்தை உணர்ந்த கிருஷ்ணா, அவரது அம்மாவின் ஆணைக்கிணங்க அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார். அவர் நினைத்திருந்தால் அங்கேயே இருந்து பல வேலைகள் செய்திருக்கலாம் ஆனால் என்ன சாதனை செய்தாலும் நம் மண்ணில் செய்ய வேண்டும் என நினைத்தார் கிருஷ்ணா.


1996 ல் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இணைந்தார். தடுப்பு மருந்து தயாரிப்பில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி, பல நோய்களுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கி பாரத் பயோடெக் நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக மாற்றிய பெருமை கிருஷ்ணாவுக்கு உண்டு. ஜிகா வைரசுக்கு உலக அளவில் பல நிறுவனங்கள் ஒரு மருந்து 30 முதல் 40 டாலர் வரை விலை நிர்ணயித்த நிலையில், இவர் அந்த மருந்தை 1 டாலருக்கு விற்பனைக்கு கொண்டுவந்து சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது உலகமே திணறிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளார். கோவாக்ஸின் என பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்திற்கு இந்திய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான இந்த தடுப்பு மருந்து வரும் 7 ஆம் தேதி மனிதர்கள் மீது செலுத்தப்பட உள்ளது. அந்த சோதனை வெற்றியடைந்தால், மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இதன் பின்னணியில் தமிழர் இருப்பது நாம் அனைவருக்கும் கிடைத்த பெருமையே