கொரோனாவால் நிமிடத்துக்கு ஒரு அமெரிக்கர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா தான்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே மிக வேகமாக நோய்த் தொற்று பரவியது.

பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் நடத்தியதால், ட்ரம்ப் நிர்வாகம் அந்த முடிவை கைவிட்டது.

இதன் காரணமாகவும் நோய் பரவும் வேகம் அங்கு பல மடங்கு அதிகரித்தது.

தற்போது வரை இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்திருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழக்கும் சோகமும் நிகழ்ந்து வருவதாக அந்த பல்கலைக்கழகம் கவலை தெரிவித்திருக்கிறது.

coronavirus

அதே போல் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனாதன் ரெய்னர் என்பவரும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இல்லாவிட்டால் நிலைமை படுமோசமாகி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.

அதே நேரம் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஃபைசர் நிறுவனம் தனது மருந்தை அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள மற்றொரு நிறுவனமான மாடர்னாவும் தங்களது மருந்து, எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை உறுதிபடுத்தி இருக்கிறது.

அமெரிக்க அரசிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கிடைத்தால் முதலில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், பலவீனமானவர்களுக்கு முதலில் தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: அதிபர் ஜோ பைடனுக்கு 78 ஆவது பிறந்தநாள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter