அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைய வாய்ப்பு! ஜோ பிடனுக்கு 49.6% பேர் ஆதரவு

Joe biden

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் மனதில் முந்தி இருப்பது யார்? அதிபராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது என்பதனை பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இருப்பினும் இரு தலைவர்களும் பரஸ்பரம் விமர்சிப்பதும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதுமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

US presidential elections

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என கருதப்படும் முக்கிய மாகாணங்களில் யாருக்கு ஆதரவு உள்ளது என “தி கார்டியன்” நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஃபுளோரிடா, பென்சில்வேனியா, மிச்சிகன், வடக்கு கரோலினா, அரிசோனா, விஸ்கான்ஸின் ஆகிய மாகாணங்களில் ஜோ பைடனுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஓஹியோ மற்றும் ஐயோவாவில் டொனால்ட் ட்ரம்புக்கு கணிசமான ஆதரவு உள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் ஜோ பிடனுக்கு 49.6 சதவிகிதம் பேரும், ட்ரம்புக்கு 42.1 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கு ஒரு மாத காலமே இருப்பதால் இரு கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்கலாமே: கொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐநா வலியுறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்ப்!

FB Page

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa