அமெரிக்க அரியணையை அலங்கரிக்கும் இந்திய வம்சாவளியினர்

Vivek Moorthy

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர். அவர்களில் உயர் பதவியை அலங்கரிக்கப்போகும் இந்திய சொந்தங்கள் யார்? பார்க்கலாம்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.

வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநர் என்ற முக்கிய பொறுப்பு நீரா டாண்டெனுக்கு (neera tanden) வழங்கப்பட்டுள்ளது.

ஒபாமா ஆட்சிக்காலத்திலும் முக்கிய பொறுப்பிலிருந்த விவேக் மூர்த்திக்கு (vivek murthy) சுகாதாரத்துறையில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை எதிர்கொள்ள அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஆலோசகராகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த செலின் கவுண்டர்.

அதேபோல் நீதித்துறை உதவி அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தாவும்(vanita gupta) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் பைடனின் மனைவியான ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா(mala adiga) பதவியேற்கிறார்.

ஜில் பைடனின் டிஜிட்டல் பிரிவு இயக்குநர் பெருமையை கரிமா வெர்மா (Garima verma) பெறுகிறார்.

வெள்ளை மாளிகை துணை ஊடகச் செயலராக சப்ரினா சிங்கும்(sabrina singh), வெள்ளை மாளிகை அலுவலக டிஜிட்டல் பிரிவு மேலாளராக ஆயிஷா ஷாவும் (aisha shah)நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பொருளாதார கவுன்சில் துணை இயக்குநராகிறார் அமெரிக்க வாழ் இந்தியராக சமீரா நஃபாஸிலி(sameera fazili).

20 Indian-Americans Nominated For Key Roles In Biden-Harris Administration

வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக பரத் ராமமூர்த்தி (bharat ramamurti) பதவியேற்கிறார்.

அதிபரின் தனி அலுவலக துணை இயக்குநர் பதவியை கெளதம் ராகவன் (gauta, raghavan) பிடித்திருக்கும் நிலையில், அதிபரின் உரைகளை தயாரிக்கும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் வினய் ரெட்டி(vinay reddy).

இதேபோல் உதவி ஊடகச் செயலாளராக பதவியேற்கிறார் வேதாந்த் படேல்(vedant patel). சோனியா அகர்வால்(sonia aggarwal) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் காலநிலை கொள்கை உயர் ஆலோசகராக பணியமர்த்தப்படுகிறார்.

வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு குழு ஆலோசகராகிறார் விதுர் சர்மா (vidur sharma) தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்துறை முதுநிலை இயக்குநர் பதவி தருண் சாப்ராவுக்கும் (tarun chhabra)தெற்காசியப் பிரிவு முதுநிலை இயக்குநராக பதவி சுமோனா குஹாவுக்கும் (sumona guha) வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் இணை ஆலோசகராக நேகா குப்தாவும் (neha gupta) துணை ஆலோசகராக ரீமா ஷாவும்(reema shah) பணியமர்த்தப்படவுள்ளனர்

இதையும் படிக்கலாமே: இனி என்ன செய்ய போகிறார் ட்ரம்ப்?