இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் – மைக் பாம்பியோ

mike pompeo

இந்தியாவுடன் அமெரிக்கா துணைநிற்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

அதன்படி மூன்றாவது வருடமாக இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பெர்க் உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Pompeo, Esper to push Trump's anti-China message in India - india news - Hindustan Times

இந்த ஆலோசனையின் போது இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய எல்லையில் சீன படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 இந்திய ராணுவ வீரர்களின் நினைவைடத்திற்கு சென்ற நாங்கள், அவர்களுக்காக அஞ்சலி செலுத்தினோம்.

நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்.

சீனாவின் கம்யூனிச அரசாங்கம் மட்டுமல்ல அனைத்து வகையிலான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்படுத்தப்படும்.

வரும்நாட்களில் இரு நாடுகளும் சைபர் தாக்குதல் விவகாரம், இந்திய பெருங்கடலில் கடற்படை போர் பயிற்சியில் இணைந்து செயல்படவுள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தையின்போது சீனாவின் கொரோன வைரஸை ஒற்றுமையுடன் வீழ்த்துவது எப்படி என விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பிராந்திய நிலைத்தன்மை, எல்லையில் அமைதியை நிலைநாட்டல், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சீன கம்யூனிச அரசை எதிர்க்கும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிக்கலாமே: அதிபர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? தெரியுமா?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter