அமெரிக்காவை அதிரவைத்த ரஷ்யா

அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே ரஷ்ய போர் விமானம் மின்னல் வேகத்தில் பறந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Donald Cook கப்பல் ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்தி கருங்கடலுக்குள் ரஷ்யாவின் su 24 போர் விமானம் பறந்து சென்றுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி 23 ஆம் தேதியன்று நடந்துள்ளது. இந்த காட்சிகளை அமெரிக்க கடற்படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

NATO நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களுக்கு உறுதியளிப்பதற்கும், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்கும் அமெரிக்க கடற்படை கருங்கடலில் இயங்குகிறது. இந்த சூழலில் USS Donald Cook கப்பல் கருங்கடலின் சர்வதேச நீரில் இயங்கி கொண்டிருந்த நேரத்தில் ரஷ்யாவின் SU 24 போர் விமானம் அருகிலேயே குறைந்த உயரத்தில் சென்றது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் ரஷ்யா அடிக்கடி மோதலில் ஈடுபடுவது தொடர்கதையாகிவருகிறது. ராணுவ தொழில்நுட்பத்தில் ரஷ்யா அதீத அளவில் வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் புதிய தொழில்நுட்ப திறனால் உலகின் ஒரே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவின் நிலை  பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை பெண்டகன் தெரிவித்துள்ளது.

எதிர்கால போர்களில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை கூட்ட மிகப்பெரிய போர்களில் ஈடுபட்டுவருகிறது.