ட்ரம்புக்கு கொரோனா! தலைகீழாக மாறும் அமெரிக்க அரசு!!

Trump

உலக சுகாதார அமைப்பு வலியுறுத்திய நிலையிலும் மாஸ்க் போடாமல் மாஸ் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அறைக்குள் முடங்கியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவின் சட்டவிதிகளின்படி அதிபர் இல்லாமல் ஒரு நொடி கூட அரசு இயங்க முடியாது.

ட்ரம்புக்கு கொரோனா உறுதியாகி இவர் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவருக்கு ரகசியப் படையினர் பாதுகாப்புத் தருவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் கவனித்து வந்த பணிகள் அனைத்தும் அவரது மேற்பார்வையில் துணை அதிபர் பென்ஸ் கவனிக்கவுள்ளார். சட்டப்படி அதிபர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அரசியலமைப்பின் 25 ஆவது திருத்தத்தின்படி துணை அதிபரிடம் பணிகள் ஒப்படைக்கப்படும். பின் அந்த நோயில் இருந்து மீண்டு வந்ததும் அவர் தமது கடமைகளை மீண்டும் கவனித்துக் கொள்ளலாம்.

கடந்த காலங்களில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த போது, இரண்டு முறை மருத்து சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ட்ரம்ப் மற்றும் பென்ஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்றால் ஏற்பட்டு கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், இருவருக்கும் 25ஆவது திருத்தத்தை செயல்படுத்த முடியாது. ஆனால், 1947 ஆம் ஆண்டின் அதிபர் வாரிசு சட்டத்தின்படி, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி அதிபர் பதவியில் அமர வாய்ப்பு உண்டு. அப்படி இல்லையென்றால் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகிய இருவரும் செயல்பட இயலாமல் போனால், உடனடியாக நீதிமன்றத்தை நாடி புதிய அதிபர் யார் என்பது முடிவு செய்யப்படும் எனக் கூறுகின்றனர் சட்ட நிபுணர்கள். ஏனென்றால் இரண்டு மணி நேரம் கூட அதிபர் பதவியில் யாரும் இல்லாதிருப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்றும் சொல்லப்படுகிறது. சட்டதிட்டங்கள் இவ்வாறு இருக்க, அமெரிக்க அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது பேசும்பொருளாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கொரோனா! மிகவும் சீரியஸாக இருக்கிறராம்!!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter