அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கொரோனா! மிகவும் சீரியஸாக இருக்கிறராம்!!

Trump

அதிபர் தேர்தலுக்கு 32 நாட்களே இருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது என கூறிய சில மணி நேரங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு கொரோனா பரவி இருப்பது தான் உலகம் முழுவதும் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

தேர்தல் பரப்புரை, நிதி திரட்டுதல், விவாதங்கள் என கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பிஸி மேனாக வலம் வந்தார் ட்ரம்ப்.

கடந்த மே மாதம் ட்ரம்பின் பாதுகாவலர் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வெள்ளை மாளிகையில் அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வெள்ளை மாளிகை ஊழியர்களும், ட்ரம்புடன் பணியாற்றுபவர்களும் தினந்தோறும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும் சரியாக முகக்கவசம் அணிவதில்லை, உதவியாளர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை மருத்துவர்கள் அறிவுரையை காது கொடுத்து கேட்பதில்லை என ட்ரம்ப் மீது அதிருப்திகள் நிலவி வந்தன.

Trump

இந்த நிலையில் தான் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அண்மை காலமாக ட்ரம்ப்புடன் அனைத்து இடங்களுக்கும் சென்றவர் ஹோப் ஹிக்ஸ்.

ஓஹியோவில் ஜோ பிடன் உடனான விவாதத்தில் பங்கேற்பதற்காக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ட்ரம்ப் , ட்ரம்பின் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களுடன் ஹோப் ஹிக்ஸும் சென்றார். அப்போது அவர்கள் யாருமே முகக்கவசம் அணியவில்லை.

அதே போல விவாத நிகழ்ச்சியிலும் ஹோப் ஹிக்ஸ் ட்ரம்புடன் பங்கேற்றிருந்தார். எனவே ஜோ பிடன், ட்ரம்பின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் என பலருக்கு தொற்று பரவி இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ட்ரம்புக்கும் , அவரது மனைவி மெலனியாவுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்போதைக்கு வெள்ளை மாளிகையிலேயே இருவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

ட்ரம்புக்கு 74 வயது என்பதால் ஹை ரிஸ்க் பிரிவில் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஏற்கனவே அவருக்கு உடல் பருமன் பிரச்னையும் இருக்கிறது. எனவே உடல்நிலையை கண்காணித்து வருவதாக ட்ரம்பின் மருத்துவர் சீன் கான்லி கூறியுள்ளார்.

இதனிடையே தாங்கள் தனிமைபடுத்தப்பட்டிருப்பதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மெலனியா ட்ரம்ப், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்! மாடல் அழகி பகீர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter