அமெரிக்காவின் இருண்ட காலம் நிறைவடைந்தது!

corona vaccine

அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ அனுமதி வழங்கியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.

corona vaccine

இந்நிலையில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த வாரம் பிரிட்டன் அனுமதி வழங்கிய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அனுமதிக்க, ட்ரம்ப் அரசு நிர்வாகம் எஃப்.டி.ஏ அமைப்புக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து எஃப்.டி.ஏ ஃபைசரின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்தது. அடுத்த 24 மணி நேரங்களுக்குள் அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி அமெரிக்காவில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை, திங்கள் அல்லது செவ்வாய் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களும் முதலில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு இனி குறையும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் – ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter