போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவர்கள்

shooting

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய 14-வது சிறுமி சுடப்பட்டார்.

அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டுமே அமெரிக்காவில் 230 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் புளோரிடாவில் குழந்தைகள் முகாமில் இருந்து தப்பி வந்த 12 வயது சிறுவன் மற்றும் 14-வயது சிறுமி குடியிருப்பு பகுதியில் இருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

A 12-year-old boy and 14-year-old girl broke into a home, found weapons and opened  fire at deputies, sheriff says - CNN

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் வந்த நிலையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை எடுத்து சிறுவர், சிறுமியர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் சிறுமி குண்டடி பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் சிறுவன் சரணடைந்ததால் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

அறுவை சிகிச்சைக்கு பின் சிறுமி நலமுடன் இருப்பதாகவும் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சிறுமி ஏற்கனவே கடந்த ஆண்டு காலி நிலங்களில் தீ வைத்து கொளுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.