திருநங்கைகளும் ராணுவத்தில் இணையலாம்- பைடன் அதிரடி

Biden

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளும் இணையலாம் என்ற உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவில் பாரக் ஒபாமா ஆட்சியில் இருந்தபோது ராணுவத்தில் திருநங்கைகள் இணைந்து சேவை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும், திருநங்கைகள் தங்களுக்கு விருப்பமான பாலினத்துக்கு மாற அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அனுமதித்தார்.

அதன்பின் ஆட்சிக்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதற்கு தடை விதித்தார்.

மேலும் ஏற்கெனவே இணைந்தவர்களும் பணிக்காலத்தை முடித்துக்கொள்ள உத்தரவிட்டார்.

ட்ரம்பின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென திருநங்கைகள் உரிமை ஆர்வலர்கள் நீண்டகாலமாக வலியுறுத்திவந்தார்.

Joe Biden

இந்நிலையில், அந்த தடையை நீக்கி புதிய உத்தரவில் தற்போதைய அதிபர் பைடன் கையெழுத்திட்டார்.

அதன்படி, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் இனி திருநங்கைகள் உள்ளிட்ட இதர பாலினத்தவர்களும் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாதுகாப்பு படையில் திருநங்கைகள் இணைய தடை விதிக்கும் உத்தரவை இன்று ரத்து செய்துவிட்டேன்.

இது மிகவும் எளிதானது. அமெரிக்காவில் தகுதிவாய்ந்த அனைவருமே திறந்த மனதுடனும், பெருமையுடனும் சேவை செய்யலாம். உலகளவில் அமெரிக்கா மிகவும் வலிமையான நாடு. அனைவருக்கும் ஏற்ற நாடு.

அமெரிக்க ராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை. பாலினத்தின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பைடனின் அதிரடி உத்தரவால் திருநங்கைகள் நல ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த 2 மாதங்களில் இந்த உத்தரவு அமல்படுத்துவோம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.