அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; தொடரும் இனவெறித் தாக்குதல்!

california shooting

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துவரும் சூழலில், அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.

மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

California shooting: Deadly shooting at office building in Orange | US &  Canada News | Al Jazeera

இதேபோல் கடந்த வாரம் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் பெண் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நிலையில், மற்றொருவர்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கட்டிடத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவது குறிப்பிடதக்கது.