ஒக்லஹோமாவில் நடைபெற்ற இந்தியன் ரிலே

indian relay

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் நடந்த இந்தியன் ரிலே குதிரையேற்று பந்தயத்தை திரளான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், எலைட் இந்தியன் ரிலே அசோசியேஷன் சார்பில் இந்த பந்தயம் நடத்தப்பட்டது. இது மிகவும்  ஆபத்தான சாகசமாக பார்க்கப்படுகிறது.

ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பாரம்பரிய பந்தயமான குதிரையேற்றத்தில் இருக்கை அமைப்பு இல்லாத குதிரைகளில் வீரர்கள் பயணம் மேற்கொள்வர்.

மேலும் குறிப்பிட்ட சுற்றுவட்டத்தை அடைந்ததும் குதிரையில் இருந்து சட்டென குதித்து மற்றொரு குதிரை என மூன்று குதிரைகளில் சென்று வீரர்கள் சாகசம் நிகழ்த்துவர்.

Thrill ride: Iowa Tribe brings Indian relay racing to Oklahoma | Local News  | stwnewspress.com

பழங்குடியின வீரர்களின் சாகச நிகழ்வை அதிகளவிலான ரசிகர்கள் திரண்டு ரசித்தனர். இந்த சாகச போட்டியில் 5 அணிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 5 பேர் இருந்தனர்.

பழங்குடியின அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, குதிரைகள் பாரம்பரியத்தின் சின்னமாகவும், பெருமை, போட்டி மற்றும் குணப்படுத்துதலுக்கான ஆதாரமாகவும் விளங்குகின்றன.

ஓக்லஹோமாவின் அயோவா பழங்குடி மக்கள் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பெர்கின்ஸில் இந்திய ரிலேவை நடத்தினர்.

அப்போது தான் இந்த விளையாட்டு மாநிலத்தில் முதல் முறையாக நடைபெற்றது. மொன்டானாவிலிருந்து 12 இந்திய ரிலே அணிகள் ஓக்லஹோமாவுக்கு வந்து நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டுள்ளன.