நிலாவுக்கு செல்லும் அமெரிக்கவாழ் இந்தியர்!

Raja Chari

சந்திரனுக்கு அனுப்ப முதல் கட்டமாக 18 நபர்களை நாசா தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அவர்களில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா வரும் 2024ஆம் ஆண்டு சந்திரனுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக 18 பேருக்கு பயிற்சி தரப்பட உள்ள நிலையில் அவர்களில் ராஜா ஜான் வுர்புத்தூர் சாரி என்ற அமெரிக்க வாழ் இந்தியரும் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்க விமானப்படை அகாடமியில் பட்டம் பெற்ற இவர் ஏற்கனவே சந்திரனுக்கு செல்வதற்கான ஆரம்ப நிலை பயிற்சிகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

43-year-old Raja Chari (right) is the only Indian-origin member of the 18-member team | Twitter: @Astro_Raja

ராஜாவின் தந்தை, நிவாஸ் வி சாரி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். 1977-ஆம் ஆண்டு விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்த ராஜா, அமெரிக்க விமானப்படை கல்லூரியில் விண்வெளிப் பொறியியல் படித்தவர்.

இதனை தொடர்ந்து மசாசூசெட்ஸ் அறிவியல் நிறுவனத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளித் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது 43 வயதாகும் ராஜா சாரி 2017 ஆம் ஆண்டு நாசாவில் விண்வெளி வீரராக சேர்ந்தார்.

ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் சந்திரனுக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இதுவரை சந்திரனுக்கு பெண்கள் யாரும் செல்லாத நிலையில் தற்போது நாசா வெளியிட்டுள்ள, வரும் 2024ஆம் ஆண்டு சந்திரனுக்கு புறப்படும் விண்கலத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இடம் பெற உள்ளனர்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவின் இருண்ட காலம் நிறைவடைந்தது!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter