அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: ட்ரம்ப்

Donald Trump

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனால் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தீவிரம் காட்டின. அதில் விளைவாக ஃபைசர் மற்றும் மாடனா ஆகிய நிறுவனங்கள் வெற்றி கண்டுள்ளன.

corona vaccine

இதனையடுத்து அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஏற்கெனவே, பிரிட்டன், கனடா, பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருவதால், அவசர கால பயன்பாட்டுக்கு ஃபைசர் தடுப்பு மருந்தை உபயோகிக்க அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து முகமை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து 30 லட்சம் மருந்துகள் அமெரிக்கா முழுவதும் அனுப்பிவைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருந்து விநியோக அதிகாரி ஜென் பெர்னா, 145 இடங்களில் திங்கள்கிழமை முதல் ஃபைசர் தடுப்பூசி கிடைக்கும் என்றார்.

அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதாகவும், தடுப்பூசி கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter