ஹெச்1பி விசாக்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா மீது ட்ரம்ப் நிர்வாகம் விதிக்க முயன்ற முக்கிய இரு கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளது.

ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டவர்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுவதற்காக அமெரிக்க அரசு ஹெச்1பி, ஹெச்2 பி, எல்1 உள்ளிட்ட விசாக்களை வழங்குகிறது. இவற்றில் ஹெச்1பி விசா இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலமானது.

குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.

அதாவது ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த விசா வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் இரண்டே கால் லட்சம் பேர் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த விசாவுக்கு அதிபர் ட்ரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

அதன்படி வெளிநாட்டவரை வேலை எடுக்கும் ஐடி நிறுவனங்கள் உயர்ந்த சம்பளம் வழங்க வேண்டும் என விதி இருந்தது.

இதனை மாற்றம் செய்த ட்ரம்ப் நிர்வாகம் அதிக சம்பளம் கொடுக்க விரும்பாத நிறுவனங்கள் அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது.

மேலும் ஹெச் 1பி விசாவுக்கான தகுதிகளும் கடினமாக்கப்பட்டன.

இதுபோன்று நடைமுறைக்கு கொண்டுவர முயன்ற இந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிபதி ஜெப்ரி ஒயிட் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்கலாமே: மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் அமெரிக்கா!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter