நாளை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதி விவாதம்!

trump- joe biden

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதி விவாதம் அமெரிக்க நேரப்படி நாளை மாலை நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் போது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது திட்டங்கள், கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நேருக்கு நேர் விவாதம் நடத்துவர்.

அதன் படி அதிபர் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதம் நடத்துவது வழக்கம். அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் முதல் விவாதம் நடைபெற்றது.

விவாதம் முடிந்த சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது விவாதத்தை காணொலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு ட்ரம்ப் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது.

debate

இந்த நிலையில் டென்னசில் உள்ள நாஷ்வில்லி(NASHVILLE) பல்கலைக்கழகத்தில் மூன்றாவது விவாதம் ‌நடைபெறவுள்ளது.

இதில் தற்போதைய அதிபரும், குடியரசுக்கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

90 நிமிடங்கள் நடைபெறவிருக்கும் இந்த விவாதத்தை என்பிசி செய்தியாளர் கிறிஸ்டன் வெல்கர் தொகுத்து வழங்கவுள்ளார்.

கொரோனா வைரசை எதிர்த்து இருக்கும் போராட்டம், அமெரிக்க குடும்பங்கள், அமெரிக்காவில் இனம், காலநிலை மாற்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமை ஆகிய ஆறு தலைப்புகள் இறுதி விவாதத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

முதல் 2 நிமிடங்கள் இரண்டு வேட்பாளருக்கும் தடையின்றி பேச அனுமதி வழங்கப்படும். ஒருவர் பேசும் போது மற்றொருவரின் மைக் அணைக்கப்படும் என புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

நான்கு நிமிடத்திற்கு பின்னர் கேள்விகளுக்கான நேரம் தொடங்கும் போது இருவரின் மைக்குகளும் செயல்படத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் விவாதத்தின் போது, ஜோ பிடனை பேச விடாமல், அதிபர் தொடர்ந்து குறுக்கிட்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்கலாமே: ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்: ஜூனியர் ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter