‘தி கிளீன் நெட்வொர்க்’ திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு

the clean network

இந்தியா- சீனா இடையிலான மோதலை தொடர்ந்து சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.

அதன்பிறகு அதனோடு தொடர்புடைய 47 சார்பு செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு இந்தியா நேற்று தடை விதித்தது.

பயனர்களின் தகவல்களை சீனா திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது.

இதனால் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு நாடுகளில் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது.

ஆனால் டிக்டாக் நிறுவனத்தின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டது.

டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனமாக மாற்றினால் இழந்த வருவாயையும், நம்பக தன்மையை டிக்டாக் மீண்டும் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் சீன செயலிகள் அரசு மற்றும் தனிநபர் தகவல்களை திருடுவதாக குற்றஞ்சாட்டிய ட்ரம்ப் அரசு, டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளைத் தடை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தங்கள் நாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டின் தனிநபர் தகவல்களையும் திருடுவதில்லை என வாதிட்டது.

the clean network

இந்நிலையில் அமெரிக்கா ‘தி கிளீன் நெட்வொர்க்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தில் இணையும்படி, இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. தி கிளீன் நெட்வொர்க் திட்டம் என்பது தனிநபர், அரசு தகவல்களை திருடாத, நம்பகமான ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இயங்கும் செயலிகளை மட்டுமே பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். சீனாவை புறக்கணிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளை இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்தியா உலகசக்தியாக உருவெடுக்க உதவி செய்வோம்: அமெரிக்கா சூளுரை

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa