உலக சுகாதார நிறுவனத்தை ஏமாற்றும் அமெரிக்கா!

WHO

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அங்கு 62 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும்.

வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

மேலும் கொரோனா பரவல் குறித்த உண்மையை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டதாகவும், சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாகவும் கூறிய அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன்படி அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 62 மில்லியன் டாலருக்கு மேல் செலுத்த முடியாது என அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

நடப்பு ஆண்டில் அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு 120 மில்லியன் டாலர் நிலுவை தொகை வழங்க வேண்டும்.

இந்த சூழலில் வழங்க வேண்டிய தொகையில் பாதி பணத்தை மட்டுமே கொடுப்போம் என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி விநியோகத்துக்கான நிதியிலும் அமெரிக்கா பங்கேற்காது என்று ட்ரம்ப் தெரிவித்துவிட்டார்.

இதையும் படிக்கலாமே:அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாக்கு எனக்குதான்: ட்ரம்ப் நம்பிக்கை

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa